Saturday 3 September 2011

வைட்டமின் A

வைட்டமின் A என்பது ஒரு கொழுப்பில்  கரையக்கூடிய வைட்டமின் ஆகும்.  அது எலும்பு வளர்ச்சி மற்றும் இரவு பார்வைக்கு முக்கியமானது.  தாவரங்களில் காணப்படும் பீட்டா கரோட்டின்   2 மூலக்கூறுகளாக உடைக்கப்பட்டு வைட்டமின்   உருவாகிறது . பீட்டா கரோட்டின் நச்சு  பொருள் அல்ல ஆனாலும்  அதிகப்படியான  வைட்டமின்   மருந்தளவுகள் நச்சு தான் என்றும் கண்டறியப்பட்டுள்ளது  . பீட்டா கரோட்டின்  புகை பிடிப் பவர்களுக்கு பொருத்தமானது இல்லை என்றும் அது புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை  அதிகரிக்கும் என்று   ஆராய்ச்சியாளர்    கண்டறிந்ததுள்ளனர் .

வைட்டமின் A கேரட் மற்றும் கீரை போன்ற போன்ற உணவுகளில் செறிந்து காணபடுகிறது . அது குறைந்த ஒளி நிலையில்  பார்வையிட   உதவுகிறது , ஏனெனில் வைட்டமின் A காட்சி நிறமி தயாரிக்க தேவைப்படுகிறது. மேலும்  இரத்த சிவப்பணு உருவாக்கத்தில் பங்கு கொண்டுள்ளது   வைட்டமின் A    இல்லையெனில் அசாதாரணமாக   உற்பத்தியாகிவிடும்  இவை  தவிர,வைட்டமின் A   நமது உடலில்  வளர்ச்சி ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது..

வைட்டமின் ஏ, டி போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் அதிகபடியாக நம் கல்லீரலில்  சேரும்போது நச்சுதன்மையானவயாக மாறுகின்றன, ஏனெனில் அவை நீரில் கரைவதில்லை .
அனால் வைட்டமின் பி போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் அதிகபடியாக எடுத்துக்கொண்டாலும் தீங்கு விளைவிப்பதில்லை. அதிகமாக உள்ள  வைட்டமின்  நீரில் கரைந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடுகிறது .


No comments:

Post a Comment